Wednesday, December 5, 2007

உலகம் இவ்வளவு தான்

காலம் கடந்த பின் தான் அதன் அருமை புரியும். நினைத்துப் பார்க்க நேரமில்லாமல் ஓடிய காலங்களை இப்பொழுது நம் மனத் திரையில் கொண்டு வந்தால் அது நம்மைப் பார்த்து நகைக்கும். என்ன ஓய்வா ? என்று! சுற்றிச் சுற்றி சுழன்ற கால்கள் இன்று சுகமாக நடைபோடுகின்றன. அது எப்படி வந்தது இந்த மன நிறைவு! சுற்றும் உலகம் ஒரு நொடி நின்றால் தெரியும் !

புத்தன் கூட ஆசைப்பட்டானாம். உயிர்கள் துன்பப்படக் கூடாதென்று!
ஆசையைத் துறப்பதற்கு மனம் எளிதில் துணியாது. பற்றினை விடுவதற்கு பற்றற்றவனின் பாதங்களைப் பற்றுக என்கிறான் வான்மறை புலவனும். ஆசைகள் எப்படி நம்மை விட்டு அகல்கின்றன? அலை மோதும் நீரின் சுழற்சி போல் நம் எண்ண அலைகள் கரை மோதுகின்றன.

நினைத்துப் பார்த்தால் உலகம் இவ்வளவுதான். அதில் ஏன் இத்தனை மோதல்கள்? இயற்கையை வளர மறுக்கும் சூழல்கள் ! ஏழை வாழ்ந்தால் என்ன? எதற்காக அவன் வசதிகளை வாய்ப்புள்ளோர் சுரண்ட வேண்டும்?

நடக்கும் தொழில் ஊழல் ஏன்? அது நடந்தால் என்ன? நாடு நலம் பெற வேண்டாமா? ஏன் திட்டங்கள் செயல்களாக மறுக்கின்றன! மறைக்கின்ற மனிதர்கள் மனந் திருந்துவார்களா? கொதிக்கின்றனர் குறைபாடுடை யவர்கள். அந்த ஏழைகளின் வாழ்வு மலர வேண்டாமா? ஏற்றமுடையோர் இயல்பாகச் செயல் பட்டால் என்ன ? அந்தச் செம்மையுடை யோருக்காகத் தானே இந்த உலகம் இத்தனையும் தாங்கிக் கொண்டிருக்கிறது! எதிர்த்து ஒரு வார்த்தை கேட்பதில்லை! இதைப் புரிந்து கொண்டாவது நாம் செயல் படக் கூடாதா?

நலிந்தோரை நலமாக நடமாட விடுவோம்!
நாட்டின் பயன்கள் அவர்களைச் சென்றடையட்டும் !

வளமான நாடு உருவாகட்டும்!!!!

9 comments:

செல்விஷங்கர் said...

சோதனைப் பின்னூட்டம்

cheena (சீனா) said...

உலகம் இவ்வளவு தான் - உலகம் இவ்வளவு தான்

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்.

cheena (சீனா) said...

உலகம் இவ்வளவு தான் - உலகம் இவ்வளவு தான்

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்.

Thekkikattan|தெகா said...

நினைத்துப் பார்த்தால் உலகம் இவ்வளவுதான். ///

அப்படி சிந்தித்துப் பார்க்க மறுப்பதால்தானே இத்தனை சிக்கலும்... அல்லது நன்கு சிந்தித்து விட்டுத்தான் இந்தனை சுய நலச் சுரண்டல்களும்... என்றைக்கு ஆசைக்கு ஒரு வரையறை கொணர்கிறோமோ அன்று வேண்டுமானால் "மனிதம்" தப்பிப் பிழைக்கலாம்...

காட்டாறு said...

உங்கள் இத்தனை கேள்விகளையும் தனித் தனி பதிவாகவே இடலாமே.

துளசி கோபால் said...

ரொம்ப நொந்துபோய் எழுதுனமாதிரி இருக்கு.

மனுசன் ரொம்ப சுயநலமியாப் போயிட்டான்(-:

செல்விஷங்கர் said...

நன்றி தெ.கா - வாருகைக்கும் கருத்துக்கும்

செல்விஷங்கர் said...

ஆம் காட்டாறு 0- நன்ர் வருகைக்கும் கருத்துக்கும் - தனித்தனி பதிவுகளாக இடவும் ஆசை தான்ன் - பார்க்கலாம்.

செல்விஷங்கர் said...

ஆம் துளசி - மனிதன் சுயநலமியாகி விட்டான். மன வருத்தத்தை வார்த்தைகளில் வடித்தேன் - அவ்வளவு தான் - நன்றி