Sunday, January 27, 2008

எப்போது கற்போம் ??

பூக்களில் உறங்கும் மௌனம் ! எங்கும்
பார்க்காமலே செல்கின்ற உறவு ! இங்கு
ஏக்கங்களை வெளியிடும் பெருமூச்சு !
சின்னஞ்சிறு விரல்களின் உழைப்பு !
மொட்டுக்கள் வெடிக்காமல் மடியும்
உரிமை மறுத்து மடியும் புவியியல்!
வளர்ச்சியும் மகிழ்ச்சியும் மறுத்து
மண்ணில் நடக்கும் மனம்!
வெள்ளம் அடித்துச் சென்ற வாழ்வு
புயல் வீசிச் சென்ற பூங்கா
நிலம் அதிர்ந்து வீழ்ந்த மக்கள்
பெருமழை பேயாய்ப் பொழிந்த காலம்
வரும் வருமெனக் காத்திருந்து
வாராத கரையோரக் கனவுகள்
எல்லாம் எங்கே பேசின நம்மோடு ?
ஓடங்கள் ஓடிய ஓரங்களில் உள்ளம்
ஓய்வாகப் பார்க்கும் பார்வை! எல்லாமே
பூக்களில் உறங்கும் மௌனம் தானே!
உள்ளம் எப்போது கற்கும் அம்மொழியை ?

3 comments:

செல்விஷங்கர் said...

சோதனை மறுமொழி

பாச மலர் / Paasa Malar said...

புதிய கோணத்தில் பூக்களின் மௌனம்..நன்றாக இருக்கிறது..

செல்விஷங்கர் said...

நன்றி பாசமலர் - ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சிந்திக்கிறோம். அவ்வளவு தான்