Saturday, May 9, 2009

அழகர் வந்தார் !!

மதுரை சித்திரைத் திருவிழாவினை முன்னிட்டு கள்ளழகர் வைகையாற்றில் இன்று ( 09.05.2009) சனிக்கிழமை காலை 8 மணி அளவில் எழுந்தருளினார்.
------------------------------------------------------------------------------

அன்னை மீனாட்சி
அன்று வந்த
வழியெல்லாம் இன்று
அழகர் வந்தார் !

வாராரு வாராரு !
அழகர் வாராரு !
என்று
ஆடிப் பாடும்
மக்கள் ஒருபால் !

கற்பூரம் கரைகின்ற
சர்க்கரையில் மனம்
சாந்தமாய் கண்
நோக்க ! கைகூப்பும்
ம்க்கள் ஒருபால்!

விண்ணதிர மண்ணதிர
கொட்டி முழக்கி !
குரல் எழுப்பி !
கைகால் கரகமாட
கண்களிலே அழகர் !

தங்கக் குதிரை
தகதகக்க ! எங்கள்
மனம் கலகலக்க
கள்ளழகர் வாராரு !
அலை அலையாய்
மலை மலையாய்
மக்கள் வெள்ளம் !

மாடவீதி
வழி மறைக்க
மற்றுமொரு
வைகையென
வளமான
வாழ் வெள்ளம் !
வழியெல்லாம்
வானோரே
வந்ததென !

மழலை யெல்லாம்
மக்கள் தோளில் !
மன மெல்லாம்
மாலவன் தன்
மா வடிவில் !
மதுரை யெல்லாம்
மீன் விழியாள்
அருள் வெள்ளம் !

செல்வி ஷங்கர்
--------------------

7 comments:

யட்சன்... said...

ரொம்ப வருசத்துக்கு பின்னால இந்த வருசம் அழகரோட...திருவிழாவுல...நான்..

மகிழ்வான தருணமிது..

அழகரால....மதுரையே அதிருது :D

வெயிலான் said...

என்ன பட்டு?

Thamiz Priyan said...

அழகர் ஊர்க்காலம்! அழகா இருக்கு!

செல்விஷங்கர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யட்சன்

செல்விஷங்கர் said...

அழகர் பசுமை செழிக்க பச்சைப் பட்டுடுத்தி வந்தார் வெயிலான்

வருகைக்கு நன்றி

செல்விஷங்கர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திகழ்மிளிர்

செல்விஷங்கர் said...

வாப்பா தமிழ் பிரியன் - அழகர் ஊரில் வந்தாலே அழகு தான்