Monday, June 25, 2012

இனிய மாலைக் காற்று

மாலை நேரக் காற்று
மகிழ்வாய் வீசும் ! பாடும்
குயில்கள் பறந்து செல்லும் !
புறாக்கள் பதுங்கும் மாடங்கள் !
மலை சூழ்ந்த மரங்கள் !
வானம் தொடும் மலைகள் !
இன்னும் இருக்கிறது இயற்கை !
இங்கே வீசும் காற்று
எங்கும் வீச வேண்டாமா ?
கிராமம் சூழ்ந்த நகரம் !
வளரும் கல்வி ! வாழும்
தொழில் ! எல்லாம் இங்கே !
ஏனோ மறந்தனர் மக்கள்
நாளும் காக்க இயற்கையை !


செல்வி ஷங்கர்

4 comments:

செல்விஷங்கர் said...

சோதனை மறுமொழி

திண்டுக்கல் தனபாலன் said...

அழகிய வரிகள் ! கவிதை அருமை !

செல்விஷங்கர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்

கதம்ப உணர்வுகள் said...

இயற்கையை ரசித்து வெளியிட்ட வரிகள் மிக அழகு..

இயற்கையை ரசிக்கத்தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் மனிதன் இயற்கையை அழித்து தன்னை வளப்படுத்திக்கொள்கிறான்.

அதனால் வரும் அவஸ்தைகளில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறான்...

சிறப்பான வரிகள் அண்ணி...

அன்பு வாழ்த்துகள்...